News January 29, 2025
கடலூர்: அங்கன்வாடி மையங்கள் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்

கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு இணையுனவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 10,223 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 9,405 பாலூட்டும் தாய்மார்களுக்கு இணையுனவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு வண்ண சீருடைகளும் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
கடலூர்: 10th போதும், ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 21, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 21, 2025
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர் லாரி மோதி பலி

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (16) புதுச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று சொந்த வேலை காரணமாக திருத்துறையூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஊராட்சி அலுவலகம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.