News April 23, 2025
கடலூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள 222 அங்கன்வாடி பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை இங்கே <
Similar News
News December 17, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மொழித்தொண்டு, கலை, அறிவியல், கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஆண்டுதோறும் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதிவாய்ந்த மகளிர் கடலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் வரும் 10.1.2026-க்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
கடலூர்: ரயில் மோதி பறிபோன 5 உயிர்கள்..

திருச்சியில் இருந்து நேற்று (டிச.16) ஹவுரா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயில் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, ரயில் தண்டவாளத்தில் நின்ற 5 பசு மாடுகள் மீது மோதியது. இதில் 5 பசுமாடுகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
சிறுவத்தூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி பூங்கோதை (68). இவர் தனது வீட்டின் அருகில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூங்கோதை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


