News April 7, 2025
கடலூரில் வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Project Coordinator/Area Field Officers) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே <
Similar News
News April 17, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாஸில் கைது

மங்கலம்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் வெங்கடேசன் (42). இவர் தனது டியூஷனில் படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News April 17, 2025
பண்ருட்டி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

பண்ருட்டி திருவதிகையில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒன்று அந்த முதியவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News April 16, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.