News March 20, 2024
கடலூரில் வரும் 5-ஆம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Similar News
News March 8, 2026
கடலூர்: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கடலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சித்தேரியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் முன்னிலையில், நேற்று (மார்ச் 7) மாற்றுக்கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
கடலூர்: பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஊக்கத்தொகை

கடலூர் மாவட்டத்தில் 264 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் 3 மாத காலத்திற்கு மட்டும் லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE


