News August 17, 2024
கடலூரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்கள்

கடலுாரில் ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்றிரவு (ஆக.16) 10:00 மணிக்கு கம்மியம்பேட்டை அய்யனார் கோவில் அருகில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென மூர்த்தியை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
குறிஞ்சிப்பாடி: தீயில் கருகி பெண் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக் குப்பத்தை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி வன்னிய மலர்(37). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது, நைட்டியில் தீப்பட்டு உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த வன்னியமலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 3, 2025
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!