News January 22, 2025
கடலூரில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News November 15, 2025
கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் – ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்திற்கு நாளை (நவ.16) கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வது, ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, பொதுமக்கள் அனைவரும் திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
கடலூர்: பேங்க் வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <


