News June 27, 2024
கடலூரில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், தலைமையில் இன்று (27.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.
Similar News
News December 4, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

கடலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு https://tamco.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையின அலுவலகத்தை நேரில் அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
கடலூர்: இடி விழுந்து கோயில் சேதம்

கடலூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரெட்டிச்சாவடி அடுத்த ரங்கரெட்டிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் மீது மின்னல் தாக்கியதில் கோவிலின் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் மின் சாதன பொருட்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


