News August 16, 2024
கடலூரில் புதிய போக்குவரத்து சேவை

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 18, 2025
கடலூர்: 10th போதும்.. மத்திய அரசு வேலை

கடலூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
News December 18, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 4.11.2025 முதல் 14.12.2025 வரை நடைபெற்றது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற டிச.19-ம் தேதி காலை 10 மணி அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
கடலூர் அருகே நாயால் பறிபோன உயிர்

கடலூர், பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த வத்சலா (55) என்பவர் மகன் மதுபாலனுடன் முதுநகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குறுக்கே நாய் வந்ததால் மதுபாலன் பிரேக் பிடித்ததால் தவறி கீழே விழுந்ததில் வத்சலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.


