News March 29, 2024
கடலூரில் பதநீர் விற்பனை படுஜோர்

கடலூர் பகுதியில் இன்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பதநீர் வாங்கி குடித்தனர். இதனால் பதநீர் விற்பனை படுஜோராக நடந்தது. இதில் 200 மில்லி பதநீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News December 7, 2025
கடலூர்: நான் முதல்வன் திட்டத்தில் 1,36,867 நபர்கள் பயன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி ஆகிய 9 தொகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1,36,867 நபர்கள் பயனடைந்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
கடலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News December 7, 2025
கடலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


