News April 1, 2024
கடலூரில் தேர்தல் வீதிமுறைகளை மீறிய திமுக

கடலூரில் நேற்று அமைச்சர் உதயநிதி திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மஞ்சக்குப்பம், பாரதி சாலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் கட்சி கொடி, பேனர்களை அதிக அளவில் வைத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார், கட்சி கொடி, பேனர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.
Similar News
News April 20, 2025
ரெட்டிச்சாவடி: பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் புதுக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து விட்டு நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த கோகுல் (19) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கோகுலை கைது செய்தனர்.
News April 20, 2025
கடன் பிரச்சினையை தீர்க்கும் கால பைரவர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோயில்களில் முதன்மையானதாக சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காலபைரவர் கோயில் கருதப்படுகிறது. காசியில் உள்ள காலபைரவர் சிலையை வடிவமைத்த சிற்பி தான் இக்கோயிலில் உள்ள சிலையை வடிவமைத்திருக்கிறார் என தல புராணம் கூறுகிறது. கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அஷ்டமியில், இக்கோயிலில் மிளகு தீபம் ஏற்றி வழிபாட்டால் கடன் பிரச்சனை நீங்கும் அது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ள இந்த பகுதி தமிழக மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். கடலோர மாவட்டங்களில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி , கடல் அரிப்பு போன்றவற்றின் பாதிப்புகளை தடுத்து வருகிறது. கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100-க்குள் பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, Share It