News April 22, 2025

கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News July 11, 2025

கடலூர்: நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை

image

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News July 11, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் (ஜூலை 10) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

கடலூர்: விபத்து தொடர்பாக 11 பேரிடம் விசாரணை தொடக்கம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் கைதான கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் விசாரணை‌ நடைபெற்று வருகிறது. இதில் விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!