News April 22, 2025
கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 20, 2025
கடலூர்: வழிப்பறி கொள்ளையன் கைது

தூக்கணாம்பாக்கம் அடுத்த கலையூரை சேர்ந்தவர் அருள் மனைவி சித்ரா (49). நேற்று முன்தினம் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சித்ராவின் கழுத்தில் கிடந்த 5 கிராம் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்ராவிடம் நகையை பறித்த விழுப்புரம் மாவட்டம் வி.அகரத்தை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 20, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!