News April 15, 2025
கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News July 11, 2025
கடலூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️ கடலூர் மாவட்டத்தில் நாளை 64,000 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ ‘BLACK INK BALL POINT’ பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு குறித்து கூறுகையில், “ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் மாணவர்களின் நலன் கருதி குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
News July 11, 2025
கடலூர்: நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.