News March 25, 2025
கடலூரில் சிறுவன் கொலை வழக்கு: பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் அஸ்வந்த் (4). கடந்த 26.1.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (26) என்பவர் முன்விரோதம் காரணமாக செந்தில்நாதன் மகன் அஸ்வந்தை கொலை செய்தார். இந்த நிலையில் சிறுவனை கொலை செய்த ரஞ்சிதாவுக்கு நேற்று கடலூர் ஏ.டி.ஜே. கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார்.
Similar News
News November 22, 2025
கடலூர்: மர்ம முறையில் இறந்த கிடந்த இளைஞர்

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (28). ஜேசிபி ஆபரேட்டரான இவர் பணி நிமித்தமாக ரெட்டாகுறிச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மர்மமான முறையில் ராஜேஷ் இன்று இறந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சிறுபாக்கம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி அவர் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <


