News March 19, 2024

கடலூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக வருகின்ற 24 ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில் கடலூரில் வருகின்ற மார்ச் 30 மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Similar News

News April 20, 2025

ரெட்டிச்சாவடி: பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

image

ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் புதுக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து விட்டு நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த கோகுல் (19) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கோகுலை கைது செய்தனர்.

News April 20, 2025

கடன் பிரச்சினையை தீர்க்கும் கால பைரவர் கோயில்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோயில்களில் முதன்மையானதாக சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காலபைரவர் கோயில் கருதப்படுகிறது. காசியில் உள்ள காலபைரவர் சிலையை வடிவமைத்த சிற்பி தான் இக்கோயிலில் உள்ள சிலையை வடிவமைத்திருக்கிறார் என தல புராணம் கூறுகிறது. கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அஷ்டமியில், இக்கோயிலில் மிளகு தீபம் ஏற்றி வழிபாட்டால் கடன் பிரச்சனை நீங்கும் அது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 19, 2025

கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

image

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ள இந்த பகுதி தமிழக மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். கடலோர மாவட்டங்களில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி , கடல் அரிப்பு போன்றவற்றின் பாதிப்புகளை தடுத்து வருகிறது. கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100-க்குள் பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, Share It

error: Content is protected !!