News March 25, 2025

கடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் தெரியுமா?

image

கடலூரில் அற்புதமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், 1. கடலூர் வெள்ளி கடற்கரை, 2. சிதம்பரம் பிச்சாவரம் காடு, 3. ஸ்ரீ முஷ்ணம் பூவராகவசாமி கோயில், 4. புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தளம், 5. காட்டுமன்னார் கோவில் வீரநாராயணன் ஏரி, 6. சிதம்பரம் நடராஜர் கோயில், 7. பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை கடற்கரை. மேலும் உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..

Similar News

News April 18, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணபிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 18, 2025

கடலூர் மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதிங்க

image

கடலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள், இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மே.03 ஆம் தேதி கடைசி நாள் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 18, 2025

தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம் பிடித்த மகன்

image

விருதாச்சலம் அடுத்த கவணை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அப்பு சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை செல்வராஜ் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் தந்தையின் கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, அப்பு காதலியை திருமணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

error: Content is protected !!