News August 14, 2024
கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள்

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Similar News
News July 8, 2025
கடலூர் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர்

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோல ரயில்வே நிர்வாகமும் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.
News July 8, 2025
கடலூர்: பள்ளி வாகனத்தில் பயணித்தவர்கள் விவரம்

கடலூர் அருகே இன்று பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனத்தில் பயணித்த மாணவர்கள் சாருமதி (15), விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் மற்றும் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
News July 8, 2025
ரயில் விபத்து குறித்து விசாரணை – கடலூர் ஆட்சியர்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 08) காலை ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து கடலூர் ஆட்சியர் கூறுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் காரணமா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக கலெக்டர் சிபி ஆதித்ய செந்திகுமார் தெரிவித்துள்ளார்.