News March 29, 2025
கடலூரில் ஆங்கிலேயர் கட்டிய அதிசய கோயில்

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியில் உள்ள குட்டியாண்டவர் கோயில் “பேஸ்பரங்கி” என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இந்த ஆலயத்தின் கருவறையில் சிலை கிடையாது. 3 ஆணிகள் மட்டுமே மூலவராக உள்ளது. அதற்கே வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் சுதை சிற்பங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது. ஒருமுறை சென்று வாருங்கள். SHARE பண்ணுங்க..
Similar News
News April 16, 2025
கடலூர்: 61 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் 61 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
News April 16, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
News April 15, 2025
கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.