News April 23, 2025

கடலுாரில் 25ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

image

கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் குறைதீர்வு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News January 9, 2026

கடலூர்: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

கடலூர்: வயலில் கிடந்த பிணம்!

image

திட்டக்குடியில் இருந்து கோழியூர் செல்லும் சாலையில் உள்ள விளைநிலத்தில் நேற்று 45 வயதுடைய ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் செவ்வேரி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி அருள்முருகன்(45) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!