News August 8, 2024
கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
ராம்நாடு: தீபாவளியன்று மஞ்சள் அலர்ட்.!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் நாளை (அக் 20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
ராமநாதபுரம் இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 19, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!