News March 28, 2025
கடன் தொல்லையால் திமுக கிளைச் செயலாளர் தற்கொலை

திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் தி.மு.க., கிளைச் செயலாளர். இவர் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உடையாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் பட்டா மாற்ற ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 2, 2025
சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.