News August 2, 2024
கடன் செயலி மிரட்டல் பெண் தற்கொலை

தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் காவிய சுதா (22) திருமணம் ஆகி சில மாதங்களே ஆகியுள்ளன. இவர் கடன் செயலி மூலம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் பாதியை கட்டி உள்ள நிலையில் இரண்டு மாதங்களாக பணம் கட்டாததால் செயலியை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் மனமடைந்த காவிய சுதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 6, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
தூத்துக்குடி: பேருந்து சக்கரத்தில் சிக்கி போட்டோகிராபர் பலி

முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(36), போட்டோகிராபர். இவர் நேற்று தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள டைடல் பார்க் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, அங்கு இருந்த பேரிக்கார்டு மீது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி அதன் சக்கரத்தில் சிக்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி, துளசிபட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE


