News February 17, 2025
கடன்,நோய் தீர்க்கும் திருமூகூர் காளமேகப்பெருமாள்

மதுரைக்கு அருகிலுள்ள திருமூகூரில் அமைந்துள்ள காளமேகப்பெருமாள் கோயில் பழமையான பாண்டியர் கால கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இந்த கோயில், சுதர்சன சேனையை தனி சன்னதியில் கொண்டது என்பது விசேஷம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலத்தில் குடும்ப கடன், நோய் தீர பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். Share it
Similar News
News November 27, 2025
மதுரை வந்த ஈபிஎஸ்ஐ வரவேற்ற மாஜி அமைச்சர்கள்

மதுரை பாண்டி கோவில் அருகே நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக,பெருங்குடி அருகே உள்ள மதுரை விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து வருகை தந்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்ஐ,முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பிறகும் மீண்டும் சென்னை புறப்பட்டார்.
News November 27, 2025
மதுரை: புதிய ரயில் நிலையத்தில் இதெல்லாம் வருகிறதா?

ரூ. 347.47 கோடியில் மதுரை கிழக்கு,மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், பார்சல் போக்குவரத்திற்கான புதிய தனி நடைமேம்பாலம், மேற்கூரையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் நிலைய கிழக்கு நுழைவாயிலின் ஒரு புதிய பல்லடுக்கு 4 சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.
News November 27, 2025
மதுரை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!

மதுரை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0452-2531159 அணுகலாம். SHARE பண்ணுங்க.


