News March 27, 2024

கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

image

தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்

Similar News

News April 11, 2025

திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

image

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

News April 11, 2025

BREAKING  அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக முதல்வரின் தங்கையுமான கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

News April 11, 2025

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஏப்.17 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 14 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் மாதம் ஊதியமாக ரூ.15,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

error: Content is protected !!