News February 23, 2025

கடத்தல் வழக்குகளில் திருச்சி விமான நிலையம் முதலிடம்

image

2023ஆம் ஆண்டில் நாட்டில்பதிவு செய்யப்பட்ட தங்க கடத்தல் வழக்குகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களாகும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு அதிக தங்கம், எலக்ட்ரானிக் உள்ளிட்டவை கடத்தி வரப்பட்டதாக தமிழகத்தில் திருச்சி விமான நிலையம் அதிக வழக்குகளை பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது.

Similar News

News April 21, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில், திருச்சி – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி பல்வேறு பணிகள் காரணமாக ஏப்ரல்.22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2025

10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்

News April 21, 2025

உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!