News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
அழகர்கோவில் அருகே கிடந்த ஆண் சடலம்

அழகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி கீழே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அ.வலையப்பட்டி விஏஓ விக்னேஷ் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். அப்பன்திருப்பதி போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் ? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News January 10, 2026
மதுரையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று ஜன.10 அல்லது நாளை ஜன. 11 முதல் கோரிப்பாளையம் சாலையை மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக மீனாட்சி கல்லூரி நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புற ம் திரும்பி சர்வீஸ் சாலை பாலம் வழியாக ஏவி மேம்பாலம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News January 10, 2026
மதுரை: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்

மதுரை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.


