News April 2, 2025
கஞ்சா, கள், சாராயம் விற்ற பெண்கள் உட்பட 63 பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 11, 2026
தருமபுரி: புதிய TRACTOR வாங்க 80% மானியம்!

தருமபுரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News January 11, 2026
கண்காட்சியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேற்று (10.01.2026) பார்வையிட்டார். உடன் துணை இயக்குநர் இராஜேந்திரன், அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
News January 11, 2026
தருமபுரியில் 12,926 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை!

தருமபுரி: கடந்த 2025ம் ஆண்டில், மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்சுகளுக்கு 43,200 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றின் மூலம், மொத்தம் 12,926 கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிகளில் விரைவாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர். அதேபோல், விபத்தில் சிக்கி காயமடைந்த 9,394 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 2,860 பேர், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட 2,330 பேர் விரைவாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.


