News May 7, 2025
ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
வேலூரில் 658 பேருக்கு ரத்து!

வேலூரில் கடந்த ஜனவரி – அக்டோபர் வரை போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 129 பேர், செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 20, 2025
வேலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே.வி. குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (நவ.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 20, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு…!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வருகிற (நவ.22) சனிக்கிழமை மற்றும் (நவ.23) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.


