News March 28, 2025

ஓரினச் சேர்க்கை மோகம் – வாலிபருக்கு கத்திக்குத்து

image

மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.

Similar News

News November 16, 2025

சேலம்: கத்திமுனையில் தம்பதியிடம் அதிர்ச்சி சம்பவம்!

image

சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – பூங்கொடி. இவர்களது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்று தெரிவித்ததால், வீட்டில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

வாழப்பாடி: 100 ஆண்டு ரகசியத்தை உடைத்த மாணவன்!

image

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடலூர் சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டு பழமையான ‘மைல்கல்’ உள்ளது. இக்கல்லில் ‘செக்சன் லிமிட்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கீழே சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டை, வாழப்பாடியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சிபிஅரசு ‘படி’ எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News November 16, 2025

வீராணம் விவசாயியிடம் வழிபறி; எட்டு பேர் அதிரடி கைது!

image

வீராணம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பூவனூர் அருகே நேற்று மாலை மணிகண்டன் என்பவர் தனது தோட்டத்தில் பால் எடுத்துக்கொண்டு வரும்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போன் பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசர் சரவணன்(28), சீனிவாசன், மாதங்கிதாசன்(26), மணிகண்டன்(24), ராம் குமார் (27) சுராஜ் பர்வேஸ் (19), கார்கில் (23) , விஷ்வா(20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!