News October 23, 2024
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் தகவல்

குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 15 காலை 10.30 மணிக்கு ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் ஆட்சித்தலைவர் அலுவலக 3வது தளத்தில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின், ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
குமரி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள் அறிவிப்பு

குமரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
குமரி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

குமரி ரயில் நிலையத்திற்கு இன்று (டிச.10) வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் இரண்டு பைகள் கேட்பாடற்று கிடந்தன. அந்த பைகளை ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது, அவற்றில் 18 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
குமரி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி..!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


