News April 26, 2025
ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 21, 2025
பார்சல்களுக்காக முதல் முறையாக தனி ரயில்

தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச.12-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. மங்களூரு-சென்னை ராயபுரம் வரை இயக்கப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த பெட்டிகளில் தலா 23 டன் பார்சல் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரும் நவ.22- ஆம் தேதி முதல் நவ.24- ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுமார் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.