News August 25, 2024

ஓமலூரில் இபிஎஸ் தலைமையில் கூட்டம்

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் வழக்கறிஞர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. திமுக அரசு அதிமுக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக சேலத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

Similar News

News November 19, 2025

கெங்கவல்லி கொலை வழக்கில் தீர்ப்பு!

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம், வீரகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டசெல்வராஜ் (57), ராயர்பாளையம், வாணியர் தெருவை சேர்ந்த செல்வம் (55) என்பவரை கடந்த 20.09.2023 ஆம் தேதி அருவாளால் கடுமையாக தாக்கியதில் செல்வம் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

News November 19, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

சமூக வலைத்தளங்களில் போலியாக நடந்து, வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதாக சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்யர்களுக்கு எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாமெனவும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

News November 18, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் (18.11.2025)-தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

error: Content is protected !!