News March 19, 2024

ஓபிஎஸ் உடன் நாமக்கல் பாஜக நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

image

சேலத்தில் இன்று 19ம் தேதி பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். கூட்டத்திற்கிடையே பாஜகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளான லோகேந்திரன், தமிழரசு ஆகியோர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Similar News

News November 24, 2025

மோகனூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் சடலம்!

image

மோகனூர் அருகே வடுகப்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (75) ஒருவந்தூரில் உள்ள தமிழழகன் விவசாய தோட்டத்தில் தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந்தேதி சென்ற அவர் காணாமல் போனார். நேற்று மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அது சுப்பிரமணி என்பதை மகன் கோபி அடையாளம் கண்டார். மோகனூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

நாமக்கல்: ரூ.23.51 லட்சத்துக்கு காய்கறி பழங்கள் விற்பனை

image

நாமக்கல் கோட்டை சாலையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், விடுமுறை தினத்தை யொட்டி நேற்று காய்கறி மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 44 டன் காய்கறிகள் மற்றும் 11 டன் பழங்கள் என மொத்தம் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.23 லட்சத்து 51 ஆயிரத்து 570-க்கு விற்பனை செய்யப்பட்டன.

News November 24, 2025

கந்தம்பாளையத்தில் பரபரப்பு! தாய் திட்டியதால் நடந்த விபரீதம்

image

கந்தம்பாளையம் அருகே கரிச்சிபாளையத்தை சேர்ந்த பவதாரணி(18), வேலூர் தனியார் கல்லூரி மாணவி. விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, வேலை செய்யவில்லை என்று தாய் சரோஜா கண்டித்ததாக தெரிகிறது. மனமுடைந்த பவதாரணி 3-ந்தேதி காலை மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயத்துடன் திருச்செங்கோடு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று உயிரிழந்தார். நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!