News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News October 14, 2025

திருவண்ணாமலைக்கு பெருமை சேர்த்த பாடலாசிரியர் விவேகா

image

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் பிறந்த பாடலாசிரியர் விவேகாவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கவிஞர் ஆகும் கனவுடன் சென்னை சென்ற விவேகா, தமிழ் பாடல், இலக்கியத்தில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் விடாமுயற்சியுடன் உழைத்திற்கு கலைமாமணி விருது அவரை வந்து சேர்ந்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 14, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (அக்:13) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News October 13, 2025

திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு

image

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3 அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள், ஊர்வலங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட விவரங்கள் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!