News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
Similar News
News November 22, 2025
காஞ்சி: தொடரும் கஞ்சா அவலம்… அதிரடி காட்டிய போலீஸ்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் உப்புகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்த போலீசார், விஷ்வா, சூர்யா ஆகிய இருவரையும் நேற்று (நவ.22) விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News November 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்துபணி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்
News November 21, 2025
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர் ஆய்வு கூட்டம்

இன்று (நவ.21) காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.


