News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <>விண்ணப்பிக்கும் லிங்க்<<>>

Similar News

News April 2, 2025

மேல்மலையனூர்: கிருத்திகை முன்னிட்டு அங்காளம்மன் வீதியுலா

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் இன்று(ஏப்.01) இரவு பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வீதியுலா உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

News April 2, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 1, 2025

விழுப்புரம்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நிர்வாக காரணங்களுக்காக கீழ்காணும் விவரப்படி பணியிட மாறுதல் வழங்கி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப.,இதன் வழி உத்தரவிட்டுள்ளார். பணிமாறுதல் வழங்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் பணியில் சேர்ந்து அறிக்கை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!