News March 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
Similar News
News March 25, 2025
குழந்தை வரம் அருளும் சந்திரசூடேஸ்வரர்

ஓசூர் நகரின் மைய பகுதியில் தேர்பேட்டை எனும் இடத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்களுக்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News March 25, 2025
கிருஷ்ணகிரி மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 25, 2025
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.