News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்க போகும் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.
News September 16, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News September 16, 2025
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் அகழ்வாய்வில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அவை கிமு 8450-ம் ஆண்டைச் சேர்ந்த நுண்கற்காலப் பொருட்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர் உலகின் ஆதிகுடி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. மீண்டும் ஒரு வரலாறு கிருஷ்ணகிரியில் இருந்து எழுதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!