News April 14, 2024

ஓடும் பேருந்தில் மாணவன் பலி

image

வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 26, 2025

தேனி: மயங்கி விழுந்த முதியவர் பலி

image

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(75). இவர் நேற்று (நவ.24) காலை அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு பாலகிருஷ்ணன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலகிருஷ்ணனை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 26, 2025

இன்றைய வாக்காளர் பதிவேற்றத்தை தெரிவித்த கம்பம் நகராட்சி

image

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 64,235 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை 61,768 நபர்களுக்கு வழங்கப்பட்டு 35,550 வாக்காளர்களின் படிவத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பதிவேற்றப்பட்ட வாக்காளர் சதவீதம் 50.34 ஆகும்.

error: Content is protected !!