News April 12, 2025
ஓசூர் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்

ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News October 31, 2025
ஓசூர்: நாட்டிலே இங்குதான் முதல்முறை!

பெங்களூர்-ஓசூர் இணைக்கும் வகையில், ஓசூர் நகரை சுற்றி 45 கி.மீ 6 வழி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஒன்னலவாடி அருகே இந்த சாலையும், பெங்களூரு-சேலம் ரயில் பாதையும் சந்திக்கின்றன. இங்கு ரயில் சேவையை பாதிக்காமல் உயர் தொழில்நுட்பம் மூலம், 40 நாளில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்படாமல், முன்கூட்டியே 8 வழி சாலைக்கான பாலமாக அமைக்கப்படுவது நாட்டிலே முதல்முறை என கூறப்படுகிறது.
News October 31, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 31, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட படிவத்தை பார்த்துக் கொள்ளவும். ஷேர் பண்ணுங்க


