News December 31, 2024
ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
கிருஷ்ணகிரியில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, இன்று (டிச.01) உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் & பொதுமக்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் எச்ஐவி /எய்ட்ஸ் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
News December 1, 2025
கிருஷ்ணகிரி: ரூ.7.38 லட்சம் குட்கா கடத்தல் 3 பேர் கைது!

ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார்,ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று (நவ.30) சோதனை செய்தனர். பின், அவ்வழியாக வந்த ஈகோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள, 125 கிலோ புகையிலை பொருட்கள் & ரூ.1,650 மதிப்புள்ள கர்நாடகா மதுபானங்களை, காஞ்சிபுரத்திற்கு கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டிச்சென்ற, ஜெயபிரசாந்த் (32) என்பவரை போலீசார் கைது செய்து. காருடன் மது,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 1, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வாழ்த்துகள்! வேலை கிடைத்துவிட்டது, ஆனால் முதலில் ரூ.50,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கவனம். இது வேலை வாய்ப்பு மோசடி. முன் பணம் கேட்கும் வேலை அல்லது முதலீட்டு வாய்ப்புகள் அனைத்தும் சைபர் குற்றமாக இருக்கலாம். ஏமாறாதீர்கள். சந்தேகம் இருந்தால் 1930-க்கு அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் செய்யவும். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


