News March 22, 2025
ஓசூரில் ரசாயன கலந்த 6 டன் தர்பூசணி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்யப்பட்ட 6 டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்த பழங்களை சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலந்துள்ளதா என்பதை மக்கள் கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 26, 2025
இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <
News March 26, 2025
பர்கூர்:சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி,தேங்காய், கிரானைட் கற்கள் கொண்ட நகரமாகவும் ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும் வருவாய் ஈட்டி வரும்தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வரும் பர்கூர் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதால் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சித்துறை அமைச்சா் அமைச்சர் நேற்று முன்தினம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
News March 26, 2025
கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் கொலை செய்த வழக்கில் இருவருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா நான்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் கோவை மற்றும் சேலம் சிறையில் அடைத்தனர்.