News June 27, 2024
ஓசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள மாடா்ன் மாதிரி பள்ளி உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஜூனியா் சதுரங்கப் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டி வரும் ஜூன் 30 வரை 5 நாள் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 மாணவிகள், 150 மாணவா்கள் என மொத்தம் 240 போ் பங்கேற்றுள்ளனர். போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டின் தலைவா் சந்தாடி, செயலாளா் லோகேஷ் தொடங்கி வைத்தனர்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரி: எச்.ஐ.வி., விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஒழிப்பு குறித்த தீவிர விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சி, இன்று (செப்.17) ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். ஆட்டோக்களில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
News September 17, 2025
கிருஷ்ணகிரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News September 17, 2025
கிருஷ்ணகிரி: தெரு நாயால் பறிபோன உயிர்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாற்றம்பாளையத்தைச் சேர்ந்த மல்லப்பா கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தெரு நாய் கடித்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று (செப்டம்பர் 17) பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.