News September 13, 2024
ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கல்

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு பிரச்னையை சரி செய்ததால், ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. உங்க ஏரியாவில் கரண்ட் வந்துடுச்சா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News December 20, 2025
சென்னை: கரண்ட் பில் குறைக்க இதோ வழி!

சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News December 20, 2025
சென்னை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

சென்னை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம்(1800 599 01234)புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
சென்னை வாக்காளர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, தவறாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம்-8 ஆகியவை சமர்ப்பிக்கலாம். பெயர் திருத்தம், மாற்றம், சேர்க்கை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க


