News March 29, 2024
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 6, 2025
திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வுபெற்ற தபால்துறை அலுவலரான இவர், கோவை – திருச்சி சாலை, செட்டிபாளையம் பிரிவு அருகே டூ வீலரில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் கிழக்கு, இடுவாய் கிழக்கு, வஞ்சிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 6, 2025
இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


