News January 1, 2025

ஒழுங்குமுறை கூடங்கள் நாளை பயன்பாட்டிற்கு வரும்

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் செயல்படாமல் இருந்தது. தற்போது, தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஜனவரி 2, 3 ஆம் தேதிகளில் செயல்பட தொடங்கும் என விழுப்புரம் விற்பனை குழுவின் செயலர் சந்துரு நேற்று அறிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

விழுப்புரம் போலீசாரின் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News November 13, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (13.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News November 13, 2025

டாஸ்மாக் ஊழியரிடம் வழிபறி: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

image

விழுப்புரம்,பனையபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 4,37,592 பணத்தை வழிபறி செய்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (நவ.13) நடைபெற்றது. பண்ருட்டி அருகேயுள்ள மாம்பட்டு பகுதியை சேர்ந்த சசிகுமார், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் 3 வருடம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!