News May 10, 2024

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

image

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதில் ஒரே பிரசவத்தில் கௌசல்யா பால்பாண்டி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

image

திருப்பூர் மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ஜெயபாலன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 16, 2025

கேட்பாரற்ற பையில் இருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பையை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 9.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 16, 2025

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் இன்று (16.11.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரர்களின் தொடர்பு எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் வழங்கவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!