News April 1, 2025
ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 7, 2025
வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் 3வது நபர் கைது

பர்கூர் வனப்பகுதியில் மார்ச் 30ம் தேதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரிந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷ் (32) மற்றும் ராஜேந்திரன் (48) என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குமார் என்பவரை பர்கூர் போலீசர் தற்போது கைது செய்துள்ளனர்.
News April 7, 2025
பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.
News April 7, 2025
ஈரோட்டில் 3 மாதங்களில் மட்டும் 19 பேர் பலி

ஈரோடு ரயில் நிலையங்களை சுற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 18 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலனோர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு உயிரிழந்ததாகவும், இது போன்ற விபத்துகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.