News April 7, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கவே நடக்காது: துரைமுருகன்

image

காட்பாடியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஏப்ரல் 6) அடிக்கல் நாட்டினார். பின்னர், பேட்டி அளித்த அவர், “2029ஆம் ஆண்டுக்கு பின்னர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பணிகள் தொடங்க உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிச்சயம் அதெல்லாம் நடக்காது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமி, ஒரே சாப்பாடு’ இதெல்லாம் நடக்காது” என கூறினார்.

Similar News

News April 8, 2025

தொடர்ந்து சதமடித்து வரும் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. நேற்றும் (ஏப்ரல் 7) வெயில் 101.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடைகளை கொண்டு செல்லுங்கள். இன்று (ஏப்ரல் 8) முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2025

பள்ளிகொண்டாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்

image

பள்ளிகொண்டாவில் 70ஆவது ஆண்டு மாடு விடும் விழா நேற்று (ஏப்ரல் 7) நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 250 மாடுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

News April 8, 2025

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப்பொறியாளர் கைது

image

குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!