News September 28, 2024

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் தற்கொலை

image

தென்காசி ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுமன உளைச்சலில்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில், நேற்று இரவு முருகேசனின் மகன் தோட்டத்தில் பார்த்தபோது அவரது தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News October 20, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.இன்று (20-10-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News October 20, 2025

தென்காசி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!

News October 20, 2025

திருமலை குமார் சாமி கோயிலில் கொடியேற்றம்

image

பண்பொழி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமலைக் குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவானது கொடியேற்றத்துடன்(அக்20) இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு திருமலைக் குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

error: Content is protected !!